மேல இருக்குறவர் recent times ல அதிகமா வெறுக்க பட்ட ஆள், காரணம் ராயப்பன கொன்னு போடுற அலெக்ஸ் ரோலில் பிகில் படத்தில் வரும் நபர். ஆனா பலருக்கும் தெரியாது இவரு தான் நிஜ வாழ்க்கை பிகில்.
10 பைசாக்கு ஒரு சோடா விக்கும் சாதாரண தின கூலி தொழிலாளி. தனக்கு கால்பந்து மேல உள்ள மோகம் கொண்டு கஷ்டபட்டு இந்தியன் டீம் ல சேர்ந்தார். மிக ஆக்ரோஷமான forward ஆட்டக்காரர். இவரு ஆடுன நேரத்தில் ” fastest international goal ” 12 second ல அடிச்சது இவரு தான். இந்தியாக்கு இன்னும் அது ஒரு record. 3 வாட்டி “Indian player of the year” வாங்கின முதல் வீரர்.
பல பேர் இவரு இந்தியா இல்லாம வெளிநாட்டுல பிறந்து இருந்தா உலக சிறப்பு கிடைச்சு இருக்கும் னு சொல்லுவாங்க. இன்னைக்கும் கேரளா ல football காதலிக்கும் எல்லாருக்கும் ஹீரோ. ஆனா இந்திய விளையாட்டு அரங்கம் பொறுத்தவரை இவரு ஒரு unsung hero..!!
I.M.Vijayan- The pride of Indian Football