சென்னை வானிலை மையம் ஒரு தரவை வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், பருவமழை அக்டோபர் 01, 2023 முதல் டிசம்பர் 04, 2023 வரையிலான காலக்கட்டத்தில் நார்மலாக பெய்தது என்றால் 69 செ.மீ. பெய்யும். ஆனால் தற்போது பெய்தது 89 செ.மீ. மழை. அதே நேரத்தில் டிசம்பர் 01, 2023 முதல் டிசம்பர் 04, 2023 வரையிலான, நான்கு நாட்களுக்கு பெய்த மழையின் அளவு 58 செ.மீ.
அதுவே 2015 ஆண்டுடன் ஒப்பிட்டு பார்த்தால், 2015 நவம்பர் மாதம் மட்டுமே 104 செ.மீ. மழை பெய்துள்ளது. டிசம்பர் 01, 2015 காலை 8.30 மணியிலிருந்து டிசம்பர் 02, 2015 காலை 8.30 மணி வரை, ஒரு நாளில் மட்டும் பெய்தது 48 செ.மீ. மழை. எனவே எந்த விதத்திலும் இந்த மழையை, 2015 மழையோடு ஒப்பீடு செய்யவே முடியாது. 2015-ல் தான் அதிக மழை பெய்துள்ளது.