பனாரஸ் பகுதியில் ஓர் இரவில் அரசு யாத்திரை நேரத்தில் ரோட்டோரத்தில் அழுதபடி நின்ற சிறுமியை கண்ட யோகிஜி அவரை சந்தித்து விபரங்கள் அறிந்தாா். தாய் தந்தையர் இல்லாத அந்த சிறுமி தனது மாமாவின் ஆதரவில் ரோட்டோரத்தில் வசித்து வந்ததும் அவரும் சில நாட்களுக்கு முன்பு மரணப்பட சில சமூக விரோதிகளின் தொல்லைகளை சந்திக்க நோ்ந்ததையும் அவரால் அறிய முடிந்தது. உடனடியாக உணவு ஏற்பாடு செய்து சிறுமிக்கு வழங்கியதோடு தனது அருகில் இருந்த மாவட்ட அதிகாரியிடம் அருகில் உள்ள நல்ல ஹாஸ்டல் ஒன்றில் சிறுமியை சோ்த்து விடவும் சிறுமியின் படிப்பு முதல் சொந்த காலில் நிற்கும் வரை உள்ள செலவுகளை தனது சொந்த கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ளவும் பணித்துள்ளாா்.