Skip to main content

The claim

பச்சிளம் குழந்தைகளைக் கடத்தி அவர்கள் கண்முன்னேயே அந்த குழந்தைகளின் உடல் உள் உறுப்புக்களை வெட்டி எடுத்து விலைக்கு விற்பவர்கள். ஆந்திராவில் பிடிபட்டவர்கள் தோலில் மாட்டிய பள்ளிக்கூடத்து பைகூட கழட்டப்படவில்லை. ஆனால் வயிற்றுக்குள் ஒழிந்திருக்கும் பாகங்கள் கழட்டப்பட்டு விட்ட நிலையில் கழுத்தறுபட்டு கண்திறந்து இறந்துகிடக்கிறது அந்த பச்சிளம் குழந்தை. ஒரு பெண் மற்றொரு குழந்தையின் கையையும் வாயையும் இறுகப்பிடித்தபடி மற்றொருவன் குழந்தையின் வயிற்றின் ஓரத்தை அழுத்தி வெட்டிக்கொண்டிருக்கும் காட்சி. அதனருகில் இரண்டு பாலகர்கள் கட்டுண்ட நிலையில் அறுபட காத்திருக்கின்றனர். எவ்வளவு படித்தென்ன?? பணத்தாசையில் குழந்தையின் கொஞ்சும் மொழிகூட பணமாக தெரிகிறதே!! பெற்றெடுக்க தவமிருந்து பெறும்போது மறுபிறவி எடுத்தவர்கள் பிள்ளைகளை வளர்க்கும்போது கண்ணும் கருத்துமாய் கவணம் காக்க வேண்டாமோ என் சக பெற்றோரே

Rating

Fake

Reviewed by Youturn ↗ ·

Original fact check ↗